fbpx

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கீங்களா..? ஐந்தே நாட்களில் ரூ.6 லட்சம் வசூல்..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

சென்னையில் விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டியிருந்ததாக கடந்த 5 நாட்களில் 1,200 வழக்குகள் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்தது.

பொதுமக்களில் சிலா் அரசு வாகனம் (எ), காவல்துறை, வழக்கறிஞர், மனித உரிமைகள் ஆணையம், பத்திரிகை, ஊடகம் போன்று பல துறைகளைச் சாா்ந்த ஸ்டிக்கா்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி ஒட்டி முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாக காவல்துறைக்கு புகாா்கள் தொடா்ந்து வந்தன. இதனைக் கருத்தில் கொண்டு விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டியிருப்பவா்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை கடந்த 27-ஆம் தேதி அறிவித்தது.

மேலும், மே 2ஆம் தேதி முதல் விதிமுறைகளை மீறி வாகன பதிவு எண் பலகையில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட நபா் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்தது. கடந்த 2ஆம் தேதி முதல் சென்னையில் வாகன பதிவு எண் பலகையில் விதிமுறைகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டியிருந்தவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. முதல்முறை வழக்குப் பதியப்பட்ட பின்னரும் வாகன பதிவு எண் பலகையை சரி செய்யாமலும், அபராததைச் செலுத்தாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட வாகனம் மீண்டும் பிடிபட்டால் ரூ. 1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மே 2ஆம் தேதி முதல் மே 6ஆம் தேதி வரையில் 5 நாட்களுக்கு இந்த விதிமுறை மீறல் தொடா்பாக 1,200 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. வரும் நாள்களில் இந்த நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது.

Read More : அமைச்சரே நீங்கள் சொல்வது உண்மையா..? எதுக்கு பொய் பேசுறீங்க..!! நிரூபிக்க தயாரா..? அன்புமணி சவால்..!!

Chella

Next Post

’நம்ப முடியாத வசூல்’..!! ’அரண்மனை 4’ திரைப்படத்தின் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா..? குஷியில் படக்குழு..!!

Wed May 8 , 2024
சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் வெளியான பின் மக்கள் அந்த படத்துக்கு தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர். மலையாள படங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களை கவரும் விதமாக தமிழில் படங்கள் வெளியானாலும் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்ப்போம் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு, மஞ்சுமல்பாய்ஸ், ஆடு ஜீவிதம், ஆவேசம் போன்ற படங்கள் 100 கோடி வசூலை கடந்துள்ளது. […]

You May Like