fbpx

குக் வித் கோமாளி புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் பேமிலி போட்டோஸ்..

மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோ வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கும். அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து நான்கு சீசனுக்கும் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இதனை அடுத்து பலருமே குக் வித் கோமாளி சீசன் 5 ல் இல்லை என்றெல்லாம் கூறி இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட் விலகி இருப்பதாக அறிவித்தார். அதனைத்தொடர்ந்து சீசன் 5 நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொறு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கினார்.  

திரையுலக நட்சத்திரங்கள் முதல் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்து கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். முதல் எபிசோடில் இருந்து ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் பிரபல சமையல் கலைஞர் மட்டுமல்ல ஒரு நடிகரும் தான். மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த பெங்குயின் படத்திலு முக்கிய ரோலில் நடித்திருப்பார்.தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் அவர் நடுவராக பங்கேற்று வருகிறார்.

Next Post

EVM, VVPAT ஆகியவற்றின் சின்னம் ஏற்றும் அலகுக்கான புதிய நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது!

Wed May 1 , 2024
EVM மற்றும் VVPAT சின்னம் ஏற்றும் அலகுகளை கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான திருத்தப்பட்ட நெறிமுறையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. அதன்படி, “சின்ன ஏற்றுதல் செயல் முறை முடிந்ததும், சின்ன ஏற்றுதல் அலகு(SLU) கொள்கலன்களில் சீல் வைக்கப்பட வேண்டும். SLU குறைந்தபட்சம் 45 நாட்கள் சேமிக்கப்பட வேண்டும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்த புதிய நெறிமுறைகளை ஏப்ரல் 26, 2024 அன்று […]

You May Like