சென்னை, செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதேபோல், இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது/ அடையாறு, கோட்டூர்புரம், ராயபுரம், கிண்டி, தரமணி, சாந்தோம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல் செங்குன்றம், பூந்தமல்லி, வண்ணாரப்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைஅறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மழையின் தாக்கத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.