fbpx

வங்கியில் கடன் வாங்கியுள்ளீர்களா..? உங்களுக்கான இஎம்ஐ அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வந்தது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை உயர்த்தின. இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை 0.85 சதவீதம் குறைக்கப்பட்டு தற்போது 7.80 சதவீதமாக குறைந்துள்ளது. மூன்று மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 0.40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆறு மாதங்களுக்கான விகிதம் 0.10 சதவீதம் குறைக்கப்பட்டு 8.7 சதவீதமாக உள்ளது. தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கான மாத இஎம்ஐ குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

ஆசிரியர்கள் கவனத்திற்கு..!! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மறந்துறாதீங்க..!!

Wed Apr 12 , 2023
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் முறையாக அறிவிப்பு வெளியிட்டு முழுமையான வெளிப்படை தன்மையுடன் பணியாளர்களை நிரப்ப வேண்டும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் நடத்தப்படும் அனைத்து அரசுப் பணிக்கான தேர்வுகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான அறிவிப்பை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி வெளியிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வுக்கான முன்னேற்பாடு […]

You May Like