தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்க உள்ள நிலையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இதை செய்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 – 2024 ஆம் ஆண்டுக்காண நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது அந்த பட்ஜெட்டில் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, இதற்கான பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த அறிவிப்புக்கு ஏராளமான பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தகுதியான குடும்ப தலைவிகளை கணக்கெடுக்கும் பணியை அரசு செய்து வருகிறது. மேலும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது. எனவே ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகள் வங்கிக் கணக்கு இல்லை என்றால் உடனே அதை தொடங்கி கொள்ள வேண்டும். அப்போது தான் ரூ.1000 பெற எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.