fbpx

’உன்ன நம்பி என் பொண்டாட்டிய விட்டு போனதுக்கு’..!! நண்பன் செய்த துரோகம்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த பாளேத்தோட்டம் அருகே குறிஞ்சிகங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகள் திலகவதி (வயது 24). இவருக்கும் சக்திவேல் (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சக்திவேல் இட்டாச்சு ஆபரேட்டராக வேலை பார்த்து வரும் நிலையில், இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே, வேலை காரணமாக சக்திவேல் டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், உதவிக்காக வந்த நண்பனிடம் தனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக அங்கேயே தங்கி வேலை செய்து வந்துள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில், கணவர் சக்திவேலின் கிராமத்தைச் சேர்ந்த அவரது நண்பரான ஹரிஷ் (22) என்ற நபரை மனைவிக்கு வேண்டிய உதவிகளை செய்து தரும்படி அவ்வப்போது கூறியுள்ளார்.

இதற்காக ஹரிஷ் காலை, மாலை என இருவேளைகளில் சக்திவேலின் குழந்தைக்கு பால் வாங்கி தர உதவியாக இருந்து வந்துள்ளார். இதற்காக பணத்தை சக்திவேல் அவரது நண்பர் ஹரிசுக்கு அனுப்பியும் வந்துள்ளார். இதற்கிடையே, திலகவதிக்கும், ஹரிசுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில், சக்திவேல் தனது மனைவி திலகவதியிடம் செல்போனில் பேச முயன்றபோது அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனைவிக்கு தெரியாமல் டெல்லியில் இருந்து புறப்பட்டு நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ஹரிசும், திலகவதியும் ஒன்றாக வீட்டில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சக்திவேல் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து தகவலை கூறி வரவழைத்துள்ளார். பின்னர், 3 மாதம் தங்கள் ஊரிலேயே இருக்கட்டும் பின்னர் திலகவதியை அழைத்துச் செல்வதாக கூறி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார் சக்திவேல். தாயின் வீட்டிற்கு வந்த திலகவதி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்து மனைவியின் உடலை கைப்பற்றி சொந்த ஊரான ஊத்தங்கரை அருகே உள்ள வன்னாம்பள்ளி கிராமத்தில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்று ஏற்பாடுகளை செய்தார். ஆனால், அதற்குள் போலீசார் விரைந்து வந்து திலகவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது திலகவதியின் உடலை கிருஷ்ணகிரி செல்லும் வழியில் தொகரப்பள்ளி காப்புக்காடு அருகே செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் வண்டியை பின் தொடர்ந்த 3 பேர் உடலை தங்களுக்கு கொடுக்கும்படி கூறி தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வண்டியை போச்சம்பள்ளி போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் உடல் பிரதேச பரிசோதனைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், கள்ளக்காதலி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த கள்ளக்காதலன் ஹரிசும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஷின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், திலகவதி தூக்குபோட்டு கொண்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. பாபு விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்று சேர கணவன் இடையூறாக இருந்த நிலையில், 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வாகன ஓட்டிகளே..!! மறந்துறாதீங்க..!! போலீசிடம் சிக்கினால் என்ன ஆகும் தெரியுமா..?

English Summary

For Thilakavathy and Harish, cheating has blossomed. In this case, when Sakthivel tried to talk to his wife Thilakavathy on his cell phone, his actions became suspicious.

Chella

Next Post

பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sat Sep 14 , 2024
Accenture, a famous IT company operating in Chennai, has released a new job notification.

You May Like