கர்நாடக மாநிலம் தாவணகெரே நகரில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவனுக்கும், மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்துள்ளனர். விடுமுறை தினங்களில் செல்போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாணவனும், மாணவியும் கல்லூரியில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று அங்கு யாருக்கும் தெரியாமல் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே தான் மாணவனும், மாணவியும் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வெளியானது. அதாவது மாணவனும், மாணவியும் கல்லூரி மாடியில் சேர்ந்து இருந்ததை அருகே உள்ள கட்டடத்தில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனை கல்லூரியில் உள்ள பிற மாணவ-மாணவிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனால் குறிப்பிட்ட அந்த மாணவனும், மாணவியும் மனம் உடைந்து போயினர். இதற்கிடையே அவமானத்தில் அந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த மாணவனும் தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் மாணவனும், மாணவியும் சேர்ந்து இருந்த வீடியோ வெளியானதால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினரும் தெரிந்து கொண்டனர். இதையடுத்து குடும்பத்தினர் சார்பில் தனித்தனியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடியோ எடுத்தது யார்? சமூக வலைதளங்களில் பதிவிட்டது யார்? என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தாவணகெரேயில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.