ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சட்ட கல்லூரியில் 20 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். திடீரென அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, மகளை காப்பாற்றி நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த வம்சி என்பவரும் இந்த மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசியுள்ளனர். ஒருமுறை மாணவியுடன் தனிமையில் இருந்த போது வம்சி அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை தனது நண்பர்கள் 3 பேருக்கு காண்பித்துள்ளார்.
இதைப் பார்த்த அவர்களுக்கு விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. தாங்களும் அந்த மாணவியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு காதலன் வம்சி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வம்சி மாணவியை விசாகப்பட்டினத்தில் இருக்கும் கிருஷ்ணா நகரில் உள்ள தனது நண்பன் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கு வைத்து மாணவியும் வம்சியும் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர், அதையும் அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். இதையடுத்து, திடீரென உள்ளே வந்த நண்பர்களை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். பிறகு அந்த வீடியோவை காட்டி 4 பேரும் சேர்ந்து மாணவியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மாணவி, தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் தந்தை போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.