fbpx

2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிரமமா? இனி அமேசான்-ல மாதிகோங்க..!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மே மாதம் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதன்படி மே 23-ம் தேதியில் தொடங்கி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், தங்களிடம் உள்ள 2000 ரூ நோட்டுகளை மக்கள் டெபாசிட் செய்தோ அல்லது வங்கியில் கொடுத்தோ மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்தது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பிற்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். முதலில் வாபஸ் பெறும் நோட்டுகளை மாற்றும் முயற்சி மந்தமாக இருந்தாலும் போகப்போக மக்கள் ஆர்வம் காட்டிவருவதாக வங்கிகள் கூறியுள்ளன.

இந்நிலையில் வாபஸ் பெறப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதில் சிரமாமோ அல்லது சிக்கலோ ஏற்பட்டால், அதனை எளிதான முறையில் வீட்டில் இருந்தபடியே மாற்றிக்கொள்ளும் ஒரு வாய்ப்பை Amazon நிறுவனம் ஏற்படுத்தி கொடுக்கிறது. அமேசான் அறிமுகப்படுத்தியிருக்கும் Amazon Pay Cash Load அமைப்பை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் அமேசான் பே பேலன்சில் ரூ.2000 மதிப்பிலான பணத்தை டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம். அதில் ரூ.50000 வரையில் டெபாசிட் செய்து அதனை ஆன்லைன் பர்சேஸ் மற்றும் ஸ்கேன் அண்ட் பே முறையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அமேசான் பே பேலன்சில் உங்களின் ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் செய்து, நீங்கள் பர்சேஸ் செய்துகொள்ளலாம். அதற்கான முறைகள்,

முதலில், Amazon-ல் ஆர்டர் செய்யும் பொருளானாது, டெலிவரியின் போது அமேசான் பே பேலன்ஸில் பணத்தை டெபாசிட் செய்ய அனுமதிக்கும் Amazon Pay Cash Load அம்சத்திற்கு தகுதியானதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். ஆர்டரில் “கேஷ் ஆன் டெலிவரி” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது உங்கள் ஆர்டரை டெலிவரி செய்தவுடன் பணமாக செலுத்த அனுமதிக்கிறது. டெலிவரி செய்யும் அசோசியேட் வந்ததும், உங்கள் Amazon Pay இருப்பில் பணத்தை டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தெரிவிக்கவும். அதன்பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணத்தை அவரிடம் ஒப்படைத்தால், அவர் உங்களுடைய தொகையை சரிபார்த்து டெபாசிட்டை செயல்படுத்துவார். அவருடைய கைக்கு உங்கள் தொகை சென்றது, டெலிவரி அசோசியேட் உங்கள் அமேசான் பே பேலன்ஸ் கணக்கில் நீங்கள் ஒப்படைத்த அதே தொகையை உடனடியாக டெபாசிட் செய்வார். பரிவர்த்தனை முடிவடைந்ததும் டெபாசிட் வெற்றிகரமாக உங்கள் கணக்கில் சென்று சேர்ந்ததா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் Amazon Pay பேலன்ஸை சரிபார்க்கலாம். அதை அமேசான் இணையதளத்திலோ அல்லது மொபைல் பயன்பாட்டிலோ சரிபார்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் அந்த தொகையை உங்களுடைய Amazon Pay பேலன்ஸில் வைப்பு வைத்ததற்கு பிறகு அதை ஆன்லைன் பர்சேஸ் மற்றும் ஸ்கேன் அண்ட் பே முறையில் நீங்கள் எங்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Maha

Next Post

2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா

Wed Jun 21 , 2023
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. பர்மிங்ஹாமில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.7 ரன்களுடன் முன்னிலையில் […]

You May Like