தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர் செல்ல எந்த தடையும் இருக்காது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், ”போக்குவரத்து தொழிலாளர்களுடன் எந்த நேரத்திற்கும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், அமைச்சர் சிவசங்கர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.