fbpx

HBD Simbu | லிட்டில் ஸ்டார் டூ STR..!! சிம்புவின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

நடிகர் சிம்பு இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் – உஷா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் சிலம்பரசன். தனது அப்பாவின் இயக்கத்தில் சிறு வயது முதலே படத்தில் நடித்து வருகிறார். சிறுவயது என்றால் 1 வயது. ஆம், 1 வயது குழந்தையாக இருக்கும் போதே 1984ஆம் ஆண்டு உறவை காத்த கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்பு. தொடர்ந்து டி.ராஜேந்தர் இயக்கிய மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, சம்சார சங்கீதம், ஒரு வசந்த கீதம் என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

பின்னர் 2002ஆம் ஆண்டு தான் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். தொடர்ந்து தம், அலை, குத்து, கோயில், மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணை தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் மன்மதன் படத்திற்கு திரைக்கதை எழுதிய அவர், வல்லவன் படத்தை தானே இயக்கியும் நடத்திருப்பார்.

வெற்றி தோல்வியை மாறி மாறி ரசித்து வந்த சிம்பு ,இடை இடையே சில தோல்வி படங்களையும் கொடுத்து வந்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார். தற்காலிகமாக எஸ்டிஆர் 48 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

தற்போது நடிகர் சிம்பு ஒரு படத்திற்கு ரூ.20 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஒரு வயது முதல் நடித்து வரும் சிம்புவின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர அடம்பர கார்கள், பங்களா என பல சொத்துக்களை சிம்பு வைத்துள்ளார். பல சர்ச்சைகள், பல நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிறகும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Chella

Next Post

இப்படியும் நடக்குமா.? மாயமான கணவன்.. 7 வருடம் கழித்து திருநங்கையாக கண்ட மனைவி.!

Sat Feb 3 , 2024
கர்நாடக மாநிலத்தில் 7 வருடங்களுக்கு முன்பு தொலைந்த கணவனை தேடிச் சென்ற மனைவிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தன் கணவர் திருநங்கையாக மாறியதை கண்ட அவர், செய்வதறியாது திகைத்தார். திருநங்கையாக மாறி அந்த கணவரிடம், மனைவியுடனும், குழந்தைகளுடனும் சேர்ந்து வாழக்கோரி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கர்நாடகா மாநிலம், ராம் நகரைச் சேர்ந்த ஐஜுர் பகுதியில், கடந்த 2017ஆம் ஆண்டு, நிதி சவால்களை சமாளிக்க முடியாமல் தனது மனைவி மற்றும் […]

You May Like