fbpx

காப்பீட்டு தொகை கொடுக்காத எல்.ஐ.சி. … 2 மாதத்திற்குள் பாலிசிதாரருக்கு கொடுக்க ஐகோர்ட் உத்தரவு…

பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடித்து வந்த எல்.ஐ.சி. நிறுவனம் 2 மாதத்திற்குள் தொகை உரியவருக்கு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்யைச் சேர்ந்தவர் திவ்யா . இவர் கடந்த 2009 மற்றும் 2010ல் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 காப்பீடுகள் எல்.ஐ.சியில் எடுத்துள்ளார். தந்தையின் பேரில் எடுத்த காப்பீடு அவர் தந்தை 2012ல் இறந்ததை அடுத்து காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

நீண்ட நாட்களாகியும் பணம் கைக்கு வரவில்லை. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் கூறி நிராகரிக்கப்பட்டு வந்தது. கடைசியாக நேரில் சென்று கேட்டதில் விபத்தில் பாதிக்கப்பட்டு உங்கள்தந்தை சிகிச்சை பெற்ற விவரத்தை மறைத்து காப்பீடு எடுத்துள்ளதால் முழுத் தொகையை அளிக்க முடியாது என எல்.ஐ.சி. கூறியுள்ளது. மேலும் வெறும் 50000 ரூபாயை வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தது.

இதனால் அதிர்ந்து போன திவ்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி சதீஸ்குமார் அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது. எல்.ஐ.சி. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியபோது திவ்யாவின் தந்தை பெற்ற சிகிச்சை விவரங்களை மறைத்து காப்பீடு பெற்றது தவறு , எனவே முழு காப்பீடு தொகை கொடுக்க முடியாது. ரூ.50 ஆயிரத்தை பெற்றுக் கொள்ளட்டும் .. என்றார். இதனிடையே மனுதாரர் தரப்பு பதில் அளிக்கையில் இந்த காப்பீட்டை பொறுத்தவரை தந்தையின் மரணத்திற்கும் விபத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவே முழு தொகையை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி எல்.ஐ.சிக்கு , திவ்யாவுக்கு தர வேண்டிய பணத்தை 2 மாதத்தில் வழங்க வேண்டும் எனவும் எல்.ஐ.சி நிறுவன உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Next Post

பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி….. உனக்கு அக்டோபர் 1 தான் குழந்தை பிறக்கும் என கூறி அலைக்கழித்த மருத்துவர்கள்…

Sat Sep 17 , 2022
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் ’’உனக்கு 1ம் தேதிதான் குழந்தை பிறக்கும் எனக்கூறி அரசு மருத்துவர்கள் அலைக்கழித்த நிலையில் நடந்தே சென்று தனியார் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்தார். தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா(22) . நேற்று இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதும் வெளியில் ஸ்கேன் எடுத்து வரும்படி கூறியுள்ளார். வலியுடனே […]

You May Like