அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ இன்று காலை ரிலீஸ் ஆன நிலையில், இணையத்தில் HD வீடியோ லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. சுமார் ரூ,.280 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று திரையரங்குகளில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். இன்று காலை அஜித் நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், ரிலீஸ் ஆன 8 மணி நேரத்தில், HD பதிப்பில் பல்வேறு இணைய தளங்களில் லீக் ஆகியுள்ளது. இது படக்குழு தலையில் இடியை இறக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
திரைப்படம் வெளியாகியதும் அவற்றை தரமான ப்ரிண்ட்ரில் இணையத்தில் ரிலீஸ் செய்வது, அதை டவுன்லோட் செய்து பார்ப்பது இரண்டும் சட்டவிரோதமானது. இதுபோன்ற செயல்கள் திரைப்படத் தயாரிப்பாளர்கள், படைப்பாளர்கள் நடிகர்களை மட்மல்ல, ஒரு திரைப்படம் உருவாவதற்கு பின்னால் கடிமாக உழைக்கும் எண்ணற்ற படக்குழு உறுப்பினர்களையும் பாதிக்கிறது.
Read more: பாஜக மாநில தலைவர் தேர்தல்.. நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்..! குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை..!!