விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்ஷயா உதயகுமார், வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் ஆரம்பத்தில் இருந்தே டபுள் மீனிங்காக பேசுவது, பெண்களை பூக்கள் என்றும் தன்னை பூந்தோட்ட காவல்காரன் என சொல்வதுமாக பெண் போட்டியாளர்களுடனே ஒட்டி உரசி விளையாடி வருகிறார். இந்நிலையில், நேற்று மாயா நடந்து செல்லும் போது அவரது பின்னழகை பார்த்து கூல் சுரேஷ் ரசிக்க, மாயா ஏன் அப்படி பார்க்குறீங்க என்றே டைரக்ட்டாக கேட்டு விட்டார். உடனடியாக தேவையில்லாமல் வாய் கொடுத்து விஷ்ணு அந்த சண்டையில் சிக்கிக் கொண்டார்.
பிக்பாஸ் எல்லாம் ஒரு நிகழ்ச்சியா அதுக்கெல்லாம் மனுஷன் போவானா என அபிஷேக் ராஜா முன்பு பேசிவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதைப் போலவே கூல் சுரேஷும் பிக்பாஸை கழுவி ஊற்றி இருந்தார். இந்நிலையில், அவரே பிக்பாஸ் போட்டியாளராக தற்போது மாறியிருப்பது தான் வேடிக்கை என சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.
பெண் தொகுப்பாளினியிடம் மேடையில் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில், கூல் சுரேஷுக்கு சோத்துக்கே வழியில்லாமல் போய்விட்டது என அவரே வீடியோ போட்டு பிச்சை எடுத்து இருந்தார். பிச்சை எடுத்து தான் பிக்பாஸ் வீட்டுக்கு கூல் சுரேஷ் போட்டியாளராக வந்துள்ளார் என பயில்வான் ரங்கநாதன் பொங்கியுள்ளார்.