சுமார் 16 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்துள்ள ரவீந்தர், தான் சிறைக்கு செல்லும் நிலையில், நடிகர் ராஜ்கிரணிடம் உதவி கேட்டும் அவர் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளரான ரவீந்தர், 4 படங்களை தயாரித்து வருவதாகவும், அதில் ”பல நடிகர்களுக்கு சம்பளம் மற்றும் அட்வான்ஸ் கொடுத்த நிலையில் தான் தன்னிடம் வாங்கிய 16 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என அவர் மீது புகார் அளித்ததாக அவரே பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், ஈஸ்வரன் பட தயாரிப்பாளர் பணத்தை வாங்கி எந்த நடிகருக்கு கொடுத்தேன் என ஏதாவது சான்று அவரிடம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார். படம் எடுப்பதற்காக பலரிடம் ஃபைனான்ஸ் வாங்கியதும் கடனில் இருப்பதும் உண்மை தான். நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்தில் நடிக்க பல லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்துள்ளேன்.
இக்கட்டான சூழலில் என்னை கைது செய்து உள்ளே வைக்கப் போவதை அறிந்து கொண்டு நடிகர் ராஜ்கிரணிடம் அட்வான்ஸாக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டேன். ஆனால், அவர் திருப்பித் தரவில்லை. ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸாக வாங்கிய தொகையை நடிகர்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனால், தயாரிப்பாளர் தலையே ஆபத்தில் இருக்கும் போது, அவசரத்துக்கு கேட்கும் போதும் அவர் கொடுக்காதது தனக்கு வருத்தம் தான்” என்றும் ரவீந்தர் பேசியுள்ளார்.