fbpx

மனைவியை ஏமாற்றி 16 வயது சிறுமி பலாத்காரம் செய்த கணவன்..!! மது குடிக்க வைத்து 3 இளைஞர்கள் கூட்டு பலாத்காரம்..!!

புதுச்சேரி நகரப்பகுதியில் உறவினர் வீட்டுக்கு வந்த மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த 30ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் தீவிரமாக சிறுமியை தேடி வந்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுமி ஆட்டோவில் ஏறிச்செல்வது தெரியவந்தது.

அந்த ஆட்டோ டிரைவர் குறித்து விசாரித்தபோது, அவர் புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டாகுப்பத்தை சேர்ந்த மொய்தீன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பாப் கட்டிங் வைத்திருந்த சிறுமியை முதலில் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவியிடம் சிறுவன் என அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

மேலும், சிறுமிக்கு மது வாங்கிக்கொடுத்து 2 முறை வீட்டிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் போதையில் இருந்த சிறுமியை, மொய்தீன் புதுவை நகரப்பகுதியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் வாசலில் கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு இறக்கி விட்டுவிட்டு தப்பியது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மொய்தீன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி இரவு புதுவை கடற்கரையில் சிறுமியை மீட்டனர். தொடர்ந்து போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்து பலாத்காரம் செய்து, நடுவழியில் இறக்கிவிட்டு சென்றதாக கூறினார். அதன்பிறகு அங்கிருந்த சென்னையை சேர்ந்த 3-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நைசாக சிறுமியிடம் பேச்சு கொடுத்து, அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்து, கோட்டக்குப்பம் அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து சென்றதும், பின்னர் அங்குள்ள ஓட்டல் அறையில் 31ஆம் தேதி அடைத்து வைத்து மதுபோதையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் ஓட்டல் அறையை காலிசெய்து விட்டு, சிறுமியை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். கடந்த 2ஆம் தேதி ஓலா கார் மூலம் புதுவைக்கு சிறுமியை மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். சென்னை வாலிபர்கள் குறித்து தனக்கு தெரியாது, நேரில் பார்த்தால் அடையாளம் காண முடியும் எனவும் அச்சிறுமி கூறியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, சிறுமியை பாதுகாப்பான இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் சென்னைக்கு சென்று 3 வாலிபர்களை பிடித்து புதுவை அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : கடல் மட்டத்திற்கு கீழே இருக்கும் மிக தாழ்வான பகுதி எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!

English Summary

He first took the girl with a bob cut to a hotel and raped her, then took her to his house and introduced her to his wife as a boy.

Chella

Next Post

ஒரு மாதம் கோதுமை உணவுகளை தவிர்த்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..!!

Mon Nov 4 , 2024
What are the health benefits if you don't eat wheat flour for a month?

You May Like