fbpx

”அந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே மனமுடைந்துவிட்டார்”..!! ”என் வீடே சுடுகாடா மாறிடுச்சு”..!! கதறும் சித்ராவின் தாய்..!!

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கணவர் ஹேம்நாத், சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அல்லது அதற்கு காரணமாக இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையே, மகள் இறந்த துக்கம் தாளாமல் சித்ராவின் தந்தை காமராஜ் (64), தாய் ஆகியோர் சோகத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் தான், சித்ராவின் தந்தை காமராஜ் தனது வீட்டில், சித்ராவின் அறையிலேயே, அவரது துப்பட்டா கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து சித்ராவின் தாய் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என் ஒரு பொன்னும், இவரும் போயிட்டாங்க. 4 மணிக்கு கூட நான் அவரை பார்த்தேன். 6 மணிக்கு சென்று பார்த்தபோது, சித்ராவின் அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். என் வீடு சுடுகாடு ஆகிருச்சு. அவன் நல்லா இருப்பானா? என் பொண்ணையும் கொன்றுவிட்டு, என் கணவரையும் கொன்றுவிட்டான். என் வீட்டிற்கு அவன் இதுக்குதான் வந்தான் என தெரியவில்லை. நாங்க சந்தோசமாக இருந்தோம்.

திருவள்ளூரில் தீர்ப்பு வந்ததும் அவர் மனமுடைந்துவிட்டார். அன்றில் இருந்து சாப்பிடாமல் இருந்தார். நானும் தைரியம் சொல்லி பார்த்தேன். இறுதியில் இப்படி பண்ணிவிட்டார். என்னை அனாதை ஆக்கிவிட்டார். என் பெண் தூணைப்போல, ஆண்பிள்ளை போல இருந்தார். என் பிள்ளையை கூட நம்பாமல், அவனை நம்பினேன். இன்று என்னை அனாதை ஆகிவிட்டான். நான் தனியாக நிற்கிறேன். சித்ரா… சித்ரா” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

Read More : இது எங்க கட்சி பிரச்சனை..!! நீங்க எப்படி தலையிடலாம்..? தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு..!!

English Summary

When the verdict came in Thiruvallur, he was disheartened. He hadn’t eaten since then. I also mustered up the courage and tried it. In the end, he did this.

Chella

Next Post

அண்ணா பல்கலை.யில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மதுரை To சென்னை வரை பாஜக மகளிரணி சார்ப்பில் நீதிப்பேரணி..!! - அண்ணாமலை

Tue Dec 31 , 2024
From Madurai to Chennai, BJP women's rally on behalf of women..!! - Annamalai

You May Like