fbpx

’அவரே ஜெயிலுக்கு போயிட்டாரு’..!! ’எனக்கு இங்க என்ன வேலை’..!! பாஜகவுக்கு தாவிய செந்தில் பாலாஜி ஆதரவாளர்..!!

பாஜகவில் இருந்த மைதிலி வினோ என்பவர் கடந்த 2022இல் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் பாஜகவுக்கு தாவியுள்ளார்.

தாமரை மலராது, கருகிவிட்டது என்று கூறி பாஜகவிடம் இருந்து விலகி செந்தில் பாலாஜி ஆதரவாளராக மாறிய மைதிலி வினோ திமுகவில் இணைந்தார். ஆனால், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தனக்கு திமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும் தன்னை கட்சி சார்ந்த எந்த நிகழ்வுக்கும் அழைப்பதில்லை என்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்பதால் ஓரம் கட்டப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், பாஜகவிடமிருந்து மீண்டும் அழைப்பு வந்த நிலையில் தான் பாஜகவில் இணைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி இருக்கும் வரை திமுக கட்டுக்கோப்பாக இருந்தது என்றும் அவர் சிறைக்கு சென்ற பின்னர் கோஷ்டி மோதல் அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால் மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் தான் பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இதை செய்தால் 10 ஆண்டு சிறை! ரூ.1 கோடி அபராதம்!… புதிய சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்?

Fri Feb 2 , 2024
அரசு பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் கசியவிடுபவர்களுக்கு 5 முதல்10 ஆண்டுகள் வரையும், ரூ.1 கோடிவரை அபராதமும் விதிக்கப்படும் என்று மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுவதை லட்சியமாக கொண்டு பலரும் முயற்சித்து வருகின்றனர். தேர்ச்சி பெறுவதற்கு சிலர் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்து வருகின்றனர். இருப்பினும் சிலர் போட்டி தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் […]

You May Like