fbpx

”எங்களுக்கு அந்த டார்ச்சர் கொடுக்குறாரு”..!! 43 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!! கணித ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ..!!

நாட்டில் பெண்கள், சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில், திருவையாறு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் (35) என்ற ஆசிரியர் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப்பாடம் எடுத்து வருகிறார். இவர், பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி புகார் வரவே சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதில், 43 மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக ஆசிரியர் முத்துக்குமரன் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து சைல்ட் ஹெல்ப் லைன் அமைப்பினர், விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தனர். அதன்பேரில், கணித ஆசிரியர் முத்துக்குமரன் கடந்த ஆக.14ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் போக்சோ சட்டத்தின் கீழ் முத்துக்குமரனை ஒரத்தநாடு போலீசார் நேற்று கைது செய்தனர்.

Read More : பணக்கார ஆண்களுக்கு ஸ்கெட்ச் போட்டு மடக்கும் இளம்பெண்..!! இதற்கு பயிற்சி வேற இருக்காம்..!! பல கில்லாடிகள்..!!

English Summary

In this, it was revealed that 43 female students were sexually harassed by teacher Muthukumaran.

Chella

Next Post

’அப்பா நீண்ட நாட்களுக்கு இருக்கணும்னா இதை பண்ணு’..!! ஐஸ்வர்யாவுக்கு கட்டளையிட்ட லதா..? எல்லாம் ஓகேவாம்..!!

Thu Oct 10 , 2024
Eldest daughter goes to Aishwarya and says that if dad wants to stay for a long time, you have to live with Dhanush.

You May Like