fbpx

’ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன்’..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்..!

அப்துல்காலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டரில் நீங்கள் உருவாக்கிய ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27ஆம் தேதி அவருடைய நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அப்துல் கலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் இஸ்லாமிய முறைப்படி அப்துல் கலாமின் குடும்பத்தினர் மற்றும் ஜமாத்தின் சார்பில் துவா ஓதி மலரஞ்சலி செலுத்தினர்.

’ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன்’..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்..!

இதற்கிடையே, அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ’ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட் என குறிப்பிட்டுள்ளார். மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன் என புகழாரம் சூட்டியுள்ளார். இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார். மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார்.

’ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன்’..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட்..!

விண்வெளி, அணுமின் ஆற்றல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகிய துறைகளின் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, இந்திய குடியரசுத் தலைவராக அக்கினி சிறகுகள் விரித்தவர், 440-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டங்கள் பெற்று, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய இன்னும் பெறற்கரிய பலப்பல சர்வதேச விருதுகள் பெற்ற பாரதத்தின் ரத்தினம் என தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களுக்காக, 2011-ல் ஊழலை ஒழிக்க ‘நான் என்ன தர முடியும்’ என்ற இயக்கத்தைத் நீங்கள் தொடங்கியபோது, உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக இந்நாளில் தங்களை வணங்குகிறேன் என்றும் வாழ்த்துங்கள், வழிகாட்டுங்கள்’ என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

“ கருணாநிதியாலேயே அது முடியல.. ஸ்டாலினால் முடியுமா..” எடப்பாடி பழனிசாமி பேச்சு..

Wed Jul 27 , 2022
சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.. மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.. இதில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை […]
’அதிமுக அலுவலகத்தை உதைத்தது தொண்டர்களின் நெஞ்சில் உதைத்ததற்கு சமம்’..! ஓபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய ஈபிஎஸ்..!

You May Like