இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஹர்திக் பாண்டியா, தற்போது, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பில் உள்ளார். சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாறிவிட்ட நிலையில், மற்ற வீரர்களை காட்டிலும் மிகுந்த பரபரப்பாக கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா செயல்பட்டுவருகிறார். இவர் போடும் பதிவுகளை கண்டு லைக் செய்வதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், இஸ்டாகிராமில் இவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை இன்ஸ்டாகிராமில் 25 மில்லியனை தாண்டியுள்ளது. அதன்படி, இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸை கொண்ட இந்திய இளம் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெற்றுள்ளார். 20-க்கும் அதிகமான பிராண்டுகளுக்கு விளம்பர தூதுவராக உள்ளார் ஹர்திக் பாண்ட்யா. அதன்படி, சமீபத்தில் தோனியுடன் இவர் இருக்கும் புகைப்படம் 5.6 மில்லியன் லைக்ஸை பெற்றது குறிப்பிடத்தக்கது.