fbpx

’இந்த பிக்பாஸ் சீசனின் ஏழரை இவர் தான்’..!! கழுவி ஊற்றிய ஜோவிகாவின் அம்மா வனிதா விஜயகுமார்..!!

பிக்பாஸ் 7-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்‌ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இதில், கூல் சுரேஷ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து தனது நடவடிக்கைகளால் ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் ஃபன் மெட்டீரியலாக மாறியிருக்கிறார். குறிப்பாக, பவா செல்லதுரை ஓட்டம் கதையை சொல்லி முடித்த பிறகு தனது மனைவியை நினைத்து சுரேஷ் உருகிய சம்பவமும் அரங்கேறியது. இதற்கிடையே, எப்போதும் இல்லாத மாதிரி இம்முறை 2-வது நாளிலேயே எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் நடந்தது. அதில் பவா செல்லதுரை, அனன்யா, ஜோவிகா, பிரதீப், யுகேந்திரன் உள்ளிட்ட 7 பேர் இருக்கின்றனர். இவர்களில் யுகேந்திரனும் பிரதீப்பும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும் முதல் வாரத்திலேயே எவிக்‌ஷன் இருக்குமா என்பது குறித்த சந்தேகமும் ரசிகர்களிடையே இருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் தற்போதைய பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் ஜோவிகாவின் தாயாருமான வனிதா விஜயகுமார் கூல் சுரேஷ் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு ஏழரை கொண்டுவரப்படுவார். இந்த முறை அந்த ஏழரை கூல் சுரேஷ்தான்.

கூல் சுரேஷ் செய்வது எதுவுமே எதார்த்தமானதாக இல்லை. தனக்கென்று அவர் ஒரு ஸ்டேட்டர்ஜியை வைத்திருக்கிறார். அவர் அதன்படிதான் விளையாடி வருகிறார். இவரை பார்க்கும்போது கடந்த சீசனில் கலந்துகொண்ட ஜிபி முத்துவும் இவரும் ஒன்று என்று தோன்றுகிறது. ஆனால், ஜிபி முத்துவை ஏழரை என்று கூற முடியாது. அவர் நல்ல மனிதர்” என்றார்.

Chella

Next Post

ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் கண்டுபிடிப்பு!… கால்நடை துறை எச்சரிக்கை!

Thu Oct 5 , 2023
கேரள கோழிக்கோடு மாவட்டத்தில் உயிரிழந்த காட்டுப்பன்றிகளின் உடலில் இருந்து ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார். தற்போது கேரளாவில் நிபா வைரஸ் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோழிக்கோடு பகுதியில் அடுத்தடுத்து காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. […]
கேரளாவில் தீவிரமாக பரவும் பன்றிக் காய்ச்சல்..!! மனிதர்களையும் தாக்குகிறதா..? அதிர்ச்சி தகவல்..!!

You May Like