fbpx

” இந்த 3 பேருக்கு தான் உண்மையா இருக்காரு..” எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்…

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி பகுதியில் 1000 பேருக்கு திமுக பொற்கிழி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சேலத்திற்கு எப்போது வந்தாலும், மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கிறீர்கள்.. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றிவிட்டீர்கள்.. மீண்டும் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. சேலம் எடப்பாடிக்கு வந்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பற்றி பேசாமல் போய்விட்டால் அவர் கோபித்துக் கொள்வார்..

அவர் ஜெயலலிதாவுக்கு, சசிகலாவுக்கு உண்மையாக இல்லை.. கட்சி தொண்டர்களுக்கும் மக்களுக்கும் உண்மையாக இல்லை.. எடப்பாடி பழனிசாமி 3 பேருக்கும் மட்டுமே உண்மையாக இருக்கிறார்.. மோடி, அமித்ஷா, ஆளுநர் ரவி ஆகியோருக்கு மட்டுமே அவர் உண்மையாக உள்ளார்..

சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் அவருக்கு பிடித்த வார்த்தைகளை விட்டு விட்டு, மற்ற வார்த்தை தவிர்த்து விட்டு படித்தார்.. இதனால் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும் போது அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்.. ஆனால் ஆளுநருக்கு முன்பாகவே எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஓடிவிட்டனர்.. ஆளுநரை எதிர்த்து தீர்மானம் கொண்டுவந்ததால் என்று அவர்கள் பயந்துவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை மக்கள் தேடி தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.. நான் பெரியார், அண்ணா ஆகியோரை நேரில் பார்த்தது இல்லை.. ஆனால் அவர்களுடன் பயணித்த மூத்த முன்னோடிகள் இங்கே இருக்கிறீர்கள்.. உங்கள் முகத்தில் நான் அவர்களை பார்க்கிறேன்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம்..!! எந்த நாட்டில் தெரியுமா..?

Sat Jan 28 , 2023
ஜெர்மனி நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஜெர்மனியில் நடைபெற்ற சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சி தான் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது. 2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி முழுவதுமே திவாலாகி விட்டது என்றே சொல்லலாம். எனினும் தற்போது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளது. பொறியியல் துறையில் உலகிலேயே சிறந்து விளங்கும் நாடாகவும் ஜெர்மனி திகழ்கிறது. […]

You May Like