fbpx

”என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்”..!! ஆண் நண்பருடன் நடுரோட்டில் சண்டையிட்ட துணை நடிகை..!! மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பைபாஸ் சாலையில், இளம் ஜோடி சண்டை காரில் இருந்து இறங்கி நடு ரோட்டில் சண்டை போட்டதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாத் பட்டாச்சாரியா என்பவரின் மகள் அங்கீதா பட்டாச்சாரியா என்பதும் அவர் துணை நடிகை என்பதும் தெரியவந்தது. இவர், தனது ஆண் நண்பரான பீகார் மாநிலம் ராம்நகர் வெஸ்ட் பகுதியைச் சேர்ந்த நிதிஷ்குமார் என்பவருடன் மும்பையில் இருந்து கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

”என்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்”..!! ஆண் நண்பருடன் நடுரோட்டில் சண்டையிட்ட துணை நடிகை..!! மதுரையில் பரபரப்பு

இதையடுத்து, கோவையில் வாடகை கார் எடுத்து இருவரும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்க்க திட்டமிட்டிருந்தனர். நேற்று மதுரையில் விடுதி ஒன்றில் தங்கிய இருவரும் இன்று மாலை ராமேஸ்வரம் செல்ல தயாரான நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகியதாகவும், துணை நடிகையான சங்கீதா பல்வேறு படங்களில் நடித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றி பார்க்க திட்டமிட்டு இருந்த நிலையில், தனது ஆண் நண்பர் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு தனது பணத்தையும் எடுத்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறினர். இதையடுத்து இருவரையும் விசாரித்த போலீசார், இருவரும் உடனடியாக தங்களது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார். மும்பையில் இருந்து மதுரை வந்து சந்தியில் நின்று சண்டையிட்ட துணை நடிகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

’லியோ’ திரைப்படம் குறித்து இயக்குநர் மிஷ்கின் சொன்ன அந்த வார்த்தை..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Mon Feb 27 , 2023
விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மிஷ்கின். வித்தியாசமான கதைகங்களை தேர்வு செய்து இயக்கி அதன் மூலம் வெற்றி இயக்குநர் என்ற அடையாளத்தையும் பெற்றவர். இயக்கத்தை தாண்டி, ஒரு சிறந்த நடிகராகவும் பார்க்கப்படும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ திரைப்படத்தில் இணைந்துள்ளார். படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக காஷ்மீர் சென்றிருந்த இயக்குநர் மிஷ்கின், […]

You May Like