fbpx

Crime | ’எங்க சந்தோஷத்தையே கெடுத்துட்டான்’..!! கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (37). இவரது மனைவி சுமதி (34). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 9 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். சுமதி கடந்த 3 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் எம்.கொத்தூரை சேர்ந்த பாலகுமாரும் (27) பணியாற்றியுள்ளார்.

அங்கு இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. பின்னர், அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இவர்களது தகாத உறவு குறித்து ஸ்ரீதருக்கும், குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சுமதியை கண்டித்தனர். ஆனாலும், சுமதியால் பாலகுமாரனை மறக்க முடியவில்லை. அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஸ்ரீதரின் மூத்த சகோதரர் சீனிவாசன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். சம்பத்தன்று சீனிவாசன் வீட்டுக்கு சென்ற ஸ்ரீதரின் மகள், இரவு அங்கேயே தங்கினார்.

ஸ்ரீதரின் மகனும் வழக்கம் போல் அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு தூங்கச் சென்று விட்டான். இதனால் வீட்டில் ஸ்ரீதர், சுமதி என இருவர் மட்டும் இருந்தனர். நேற்று காலை சீனிவாசன் எழுந்து வழக்கம் போல் தம்பி ஸ்ரீதரை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அங்கே ஸ்ரீதர் பேசாமல் கட்டிலில் படுத்திருந்தார். அவர் கன்னங்கள் இரண்டும் சிவந்திருந்தன. காது அருகே ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டார். பின்னர், அவர் இறந்து கிடந்ததை பார்த்து சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சுமதியிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

சுமதி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், “எனது கள்ளக்காதல் உறவுக்கு கணவர் குறுக்கிடுகிறார். இது குறித்து பாலகுமாரிடம் கூறினேன். என் கணவர் இருக்கும் வரை எங்களால் மகிழ்ச்சியான வாழ்க்கையை தொடர முடியாது என்றேன். இதையடுத்து, எனது கணவரை தீர்த்து கட்ட இருவரும் சேர்ந்து முடிவு செய்தோம். அதன்படி வீட்டில் குழந்தைகள் இல்லாததை பாலகுமாரிடம் தெரிவித்து பின்பக்க கதவை திறந்து வைத்தேன். அதிகாலையில் வீட்டுக்கு வந்த பாலகுமாரனுடன் சேர்ந்து, கணவரின் கைகளைப் பிடித்துத் தலையணையால் முகத்தைப் பலமாக அழுத்தினோம். இதில், என் கணவர் இறந்து விட்டார்.

என் கணவர் இயற்கையாக இறந்தது போல் ஊரை ஏமாற்ற திட்டமிட்டேன். ஆனால், போலீசார் கண்டுபிடித்துள்ளனர்“ என்று சுமதி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, சுமதி மற்றும் அவரது காதலன் பாலகுமாரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”பேய் மழை.. உடைந்தது அணை”..!! ஊருக்குள் புகுந்த தண்ணீரால் 120-க்கும் மேற்பட்டோர் பலி..!! கென்யாவில் சோகம்..!!

Chella

Next Post

ஆதார் எண் தொலைந்துவிட்டதா..? இனி கவலை வேண்டாம்..!! அதை மீட்க ஈசியான வழி இதோ..!!

Tue Apr 30 , 2024
ஆதார் என்ற 12 இலக்க தனித்துவ அடையாள எண் என்பது இந்திய குடிமக்களுக்கும் வழங்கக்கூடிய ஒரு எண்ணாகும். இதனை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் ஒரு டிஜிட்டல் ஐடி கார்டு போல பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும்போது, ஆதார் எண்ணை தவறவிடுவது அல்லது மறப்பது ஒரு நபருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். ஒருவேளை உங்களுடைய ஆதார் எண்ணை நீங்கள் தொலைத்திருந்தாலோ அல்லது மறந்துவிட்டாலோ அதனை அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டில் இருந்து […]

You May Like