நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்ட அமைப்பு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சீமானின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தோம். ஆனால், அவரது செயல்பாடுகள் முரண்பாடாக உள்ளது. கட்சி நகர்வது முக்கியமில்லை. அது வெற்றியை நோக்கி நகர வேண்டும்”.
விருப்பம் இருந்தால் கட்சிக்குள் இருங்கள். இல்லையென்றால், கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்று சீமான் கூறுகிறார். ஆகையால், நாம் தமிழர் கட்சியில் இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லாததால், நாங்கள் விலகுகிறோம். குறிப்பாக அருந்ததியினர் குறித்த சீமானின் பேச்சைக் கண்டித்து கட்சியில் இருந்து விலகுகிறோம்.
சீமான், ‘வந்தேறிகள்’ எனத் தொடர்ந்து பேசி வருவதால் எங்களால் மக்களைச் சந்திக்க முடிவதில்லை. ஆகையால், சுமார் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறோம். வேறு எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். ஏற்கனவே சேலம், விழுப்புரம் மாவட்ட செயலாளர்கள் விலகிய நிலையில், தற்போது கோவை மாவட்ட செயலாளர் விலகியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவதால், சீமானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Read More : 2025ஆம் ஆண்டில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை..? பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!