fbpx

’தீங்கு விளைவிக்க முயல்பவர் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும்’!. பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை!

PM Netanyahu Warns: எங்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர் மிகவும் பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய போர், ஒன்பது மாதங்களாக நீடித்து வருகிறது. ஹமாஸ் ராணுவ தளபதியாக இருந்த முஹமது டெயிப், இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.

ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரானிய உச்ச தலைவர் அலி கொமேனி அறிவித்தார். இதனால், மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுடன் இணைந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேலைத் தாக்க காத்திருப்பதால் மேற்கு ஆசிய பகுதியில் முழுமையான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, மேற்கு ஆசியாவில் உள்ள தனது ராணுவ கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளுக்கு கூடுதல் ஏவுகணை பாதுகாப்பு திறன் கொண்ட கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களை அனுப்ப உத்தரவிட்டுஉள்ளதாக அந்நாட்டுராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துஉள்ளார். மேற்கு ஆசியாவை நோக்கி விமானப் படையின் ஒரு பிரிவும் சென்றுள்ளதாகவும், இஸ்ரேல் அருகே ஒரு விமானம் தாங்கி கப்பல் நிறுத்தப்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துஉள்ளது.

இந்தநிலையில், திருத்தல்வாத சியோனிசத்தின் தலைவரும் நிறுவனருமான ஜீவ் ஜபோடின்ஸ்கியின் மறைவின் ஆண்டு நினைவஞ்சலி விழாவில் பேசிய பிரதமர் நெதன்யாகு, காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான இராணுவ முயற்சிகளை அதிகரிக்குமாறு ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் அழைப்பு விடுத்தார், “ஹமாஸ் மீதான இராணுவ அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமே அனைத்து நோக்கங்களையும் அடைய வழிவகுக்கும்.

“ஈரானும் அதன் கூட்டாளிகளும் பயங்கரவாதத்தின் பிடியில் எங்களைச் சுற்றி வளைக்கப் பார்க்கிறார்கள்””ஒவ்வொரு முன்னணியிலும், ஒவ்வொரு அரங்கிலும் – அருகில் மற்றும் தொலைவில் அவர்களுக்கு எதிராக நிற்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு தீங்கு விளைவிக்க முயல்பவர் மிகவும் பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Readmore: வன்முறை தேசமாக மாறிய வங்கதேசம்!. 100-ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!. நாடுதழுவிய ஊரடங்கு பிறப்பிப்பு!

English Summary

Prime Minister Netanyahu: ‘Whoever seeks to harm us will pay a very heavy price’

Kokila

Next Post

இத்தனை சோகத்திலும் இப்படி ஒரு கேவலமான செயலா..? எப்படித்தான் மனசு வருதோ..? வயநாட்டில் அதிர்ச்சி..!!

Mon Aug 5 , 2024
While the people affected by the landslide in Wayanad are staying in the relief camps, there has been a sensational complaint that their houses have been looted.

You May Like