உத்தரபிரதேசத்தில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்ற +2 மாணவன் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் சதர்பூர் என்ற பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகின்றது. இதில் தலைமைஆசிரியராக பணியாற்றி வருபவர் ராம்சிங்வர்மா . நேற்று இருமாணவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தலைமை ஆசிரியர் தலையிட்டு இருவரையும் எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரடைந்த மாணவர் , லைசன்ஸ் இல்லா துப்பாக்கியை சட்டத்திற்கு புறம்பாக பள்ளிக்கு எடுத்து வந்துள்ளான். இந்த விவாகரத்தில் மீண்டும் மாணவருக்கும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளான்.
பயந்து போன ராம்சிங் அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. மாணவர் இரண்டு முறை தனது துப்பாக்கியால் தலைமை ஆசிரியரை சுட்டுள்ளான். இதனால் ரத்தம் கசிய கசிய அதே இடத்தில் விழுந்தார். பிற ஆசிரியர்கள்உடனடியாக வந்து அவரை லக்னோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வியில் பதிவாகி உள்ளது.
சம்மந்தப்பட்ட மாணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள தலைமை ஆசிரியரின் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.