மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். இதன் காரணமாக, உடல் எடை குறைந்து விடாது மாறாக உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் தான் வந்து சேரும்.
ஆகவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது உடல் எடையை குறைப்பதற்கான ஒரு முக்கிய தீர்வை நாம் காணலாம். அதாவது உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை டீ தொடர்பாக தற்போது நாம் காணலாம்.
இந்த தேநீர் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும் தற்ப்போதெல்லாம் மக்கள் இந்த டீயை அதிகம் விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேநீர் தயாரிப்பதற்கு மல்லிகை பூக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவற்றின் நறுமணமும் நன்றாக உள்ளது இதை கிரீன் டீயில் இருந்து வேறுபட்டதாக பார்க்கப்படவில்லை. ஆனால் அதன் நன்மைகள் அதிகமாக இருக்கிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது 3 முறை குடிக்கலாம். ஆனாலும் அதிகப்படியான பயன்பாடு தீமைகளை உண்டாக்கும் என்கிறார்கள்.
இந்த மல்லிகைப்பூ டீயில் இயற்கையாகவே கலோரிகள் குறைவு என்று கூறப்படுகிறது ஒரு கோப்பையில் சுமார் இரண்டு கலோரிகள் இருக்கின்றன. பால் டீக்கு பதிலாக இதனை குடிக்க தொடங்கினார் உடல் எடையை இலகுவாக குறைத்து விடலாம் என்று கூறப்படுகிறது.
கிரீன் டீ யை போலவே மல்லிகை பூ டீயிலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் காபின் உள்ளடக்கம் இருப்பதால் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தை மேம்படுத்துவதன் மூலமாக எடை குறைப்புக்கு உதவியாக இருக்கும்.
இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது எடை குறைப்பை ஊக்குவிக்க செய்கிறது. நீங்கள் ஒரு சில மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை தொடர்ந்து இதனை குடித்து வந்தால் எடை குறைப்பு தெளிவாக தெரியும் இத்துடன் உணவு உடற்பயிற்சி மற்றும் மற்ற மாற்றங்களும் அவசியம் என்று கூறப்படுகிறது.
ஆனால் இதனை அதிகமாக குடிக்க வேண்டாம். அதன் பிறகு உடலில் காஃபின் அளவு அதிகரிக்கலாம் இதனால் குமட்டல் வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.