fbpx

ஒரு டீயில் இத்தனை நன்மைகளா!!! இனி எந்த நோய்க்கும் மாத்திரை வாங்க அவசியம் இல்லை..

டீ பிடிக்காதவர்கள் யாராது இருக்க முடியுமா?? வாய்ப்பு சற்று குறைவு தான். என்ன தான் டீ நமக்கு பிடித்திருந்தாலும் அதை அதிகமாக குடிக்கும் போது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், டீ குடித்தால் உங்கள் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த டீயால் உடலுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும்.

அப்படி அது என்ன டீ தெரியுமா?? “ப்ளூ டீ” அல்லது “சங்கு பூ டீ”. ஆம், சங்கு பூ டீயில் ‘ஃப்ளேவனாய்ட்ஸ்’ என்ற ரசாயனம் உள்ளது. இதனால் நமது உடலில் புற்று நோய் செல்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. அற்புதமான இந்த தினமும் சங்கு பூ டீயை நாம் தொடர்ந்து குடித்து வந்தால், உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி எளிதில் கிடைத்து விடும். மேலும், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த டீயை குடித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மேலும், இந்த டீயால் குடற்புண், அல்சர், அஜீரணக்கோளாறு, வயிறு எரிச்சல் ஆகியவை குணமாகும்.

இந்த டீ, உடல் உஷ்ணத்தை குறைக்கும். கல்லீரலைப் பலப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகள் மலம் வழியாக வெளியேறிவிடும். இதனால் ரத்த ஓட்டம் சீர் ஆவதோடு, முடி உதிர்வை தடுக்கும். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த டீயை எப்படி செய்வது என்று பார்ப்போம்..

முதலில், அடுப்பில் பாத்திரம் வைத்து, அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு 10 ஊதா நிற சங்கு பூவை போட்டு 5 நிமிடம் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்து, நீல நிறத்தில் உள்ள இந்த ப்ளூ டீயில், எழுமிச்சைச்சாறு 1 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது சுவையான ஆரோக்கியமான ப்ளு டீ ரெடி..

Maha

Next Post

மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக வெளியே அனுப்ப கூடாது...! அரசு அதிரடி உத்தரவு...!

Sun Oct 8 , 2023
மாணவர்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தும், 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்தும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 6 முதல் 12-ம் […]

You May Like