நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு முனைக்கு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொது குழு கூட்டம் நடந்தது மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர் சித்தானந்த கணேஷ் வரவேற்று பேசினார்.
இதில் மாநில பொருளாளர் சத்யமூர்த்தி மாநில இணை செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்று கொண்டனர். இத்தகைய நிலையில், கூட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.
அத்துடன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வேதாரண்யம் தாலுகாவில் அதிகளவில் சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றி வருகின்ற காரணத்தால், மாவட்டத்தில் இதர தாலுகாவில் பணியாற்ற கலந்தாய்வு மூலமாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதேபோல 300 தொழிலாளர்களுக்கும் மேல் பணியாற்றும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளர்களை காலமுறை ஊதியத்தின் பணியமர்த்த வேண்டும். போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் லோகநாதன் நன்றி தெரிவித்தார்.