fbpx

கோடைக்காலம் தொடங்குவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்!… குணப்படுத்த சில எளிய வழிகள் இதோ!…

கோடைக்காலம் தொடங்குவதையொட்டி, குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் பிரச்சனைகளில் இருந்து சில எளிய வழிகள் மூலம் எப்படி சரிசெய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல்நலப் பிரச்சனைகள் அவ்வபோது ஏற்படும். சிலருக்கு தொண்டைவலி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவைகள் ஏற்படும். ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்காமல், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இயற்கை முறையில் உடல்நலப் பிரச்சனைகள் எப்படி சரிசெய்வது குறித்து இதில் அறிந்துகொள்வோம். அதன்படி, தண்ணீரை நன்கு காய்ச்சி குழந்தைகளை நீராவி பிடிக்க வைத்தால், தொண்டை வலி மற்றும் இருமல் மட்டுபடும். நாளொன்றுக்கு 3 முறை நீராவி பிடிப்பது நல்ல பலனை அளிக்கும்.

இதேபோல், உப்பு தண்ணீரை கொப்புளித்து துப்பினால் எந்த கிருமியாக இருந்தாலும் சல்லிசல்லியாக உடைத்தெறியப்படும். இதனை தினமும் 3 முறை செய்தால் போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். அவ்வபோது வெதுவெதுப்பான நீரை குடித்துவந்தாலே போதும். அதனுடன் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். இஞ்சி சாறு எடுத்து அதனை தேனுடன் கலந்து குடித்து வந்தால் சளி இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும். மிளகு அல்லது இஞ்சி சேர்த்து தேனீர் செய்து குடிக்கலாம். இதனுடன் சிறிது துளசி சாறும் கலந்து எடுத்துக்கொண்டால் நிச்சயம் தொண்டை வலி இருமல் குணமாகும். அவ்வப்போது ஒருசில மிளகுகளை சாப்பிட்டுவந்தால் தொண்டை வலியை குறைப்பதோடு, நெஞ்சு சளியையும் கட்டுப்படுத்தி இருமலையும் சரிசெய்யும்.

Kokila

Next Post

எச்சரிக்கை!... அதிவேகமாக உயர்ந்து வரும் கடல் மட்டம்!... ஆபத்தில் சென்னை, கொல்கத்தா நகரங்கள்!... ஆய்வில் ஷாக் ரிப்போர்ட்!

Mon Mar 6 , 2023
அதிவேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால், இந்திய நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை இந்த நூற்றாண்டில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீர் விரிவடைந்து கடல் நீர் மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது. இதுதவிர, துருவ பகுதிகளில் உருகும் பனிப்பாறைகளால், அதிகளவிலான நீர் பெருங்கடலில் இருந்து வெளியேறுகிறது. இதனால், கடல் நீரின் மட்டம் […]

You May Like