fbpx

குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் ஏற்படுகிறதா.? நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கொடுக்க வேண்டியவை..!

பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயதாகும் வரை நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இதனால் அடிக்கடி தொற்று கிருமிகள் உடலை பாதித்து நோய்வாய்ப்படுகின்றனர். இவ்வாறு அடிக்கடி நோய் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது.

குழந்தை பருவத்தில் நாம் உண்ணும் உணவு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தானதாக இருக்கிறதோ, அதை பொறுத்து வயது முதிர்ந்த பின்பும் நம் உடலில் நோய் பாதிப்பு அதிகமாக ஏற்படாது. குறிப்பாக ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு சில பொருட்களை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.

அதிமதுரம் – ஆன்ட்டிவைரல் பண்புகள் அதிமதுரத்தில் அதிகமாக இருப்பதால், இது உடலை தாக்கும் தொற்று கிருமிகளை வளர விடாமல் தடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. தினமும் குழந்தைகளின் உணவில் அதிமதுரத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.

ஜாதிக்காய் – ஆண்டி மைக்ரோபோபியல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் அதிகமுள்ள ஜாதிக்காயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு தரலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஜாதிக்காயை மருந்தாக பயன்படுத்துவதை நாம் பார்த்து இருப்போம். இது குழந்தைகளின் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்கிறது.

துளசி – பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட துளசியை சுடு தண்ணீரில் வேக வைத்து குழந்தைகளுக்கு தண்ணீர்  தாகம் எடுக்கும் போது கொடுக்கலாம். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இதில் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளை உடனடியாக அழிக்கிறது.

அஸ்வகந்தா – ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தா தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நன்றாக செயல்பட வைத்து தொற்று கிருமிகள் பாதிக்காமல் பாதுகாக்கிறது.

நீர்பிராமி – ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் முக்கியமான மூலிகை செடியான நீர் பிராமியை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலில் அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

வசம்பு – பாரம்பரிய மூலிகையான வசம்பை பல்வேறு வகையான உடல் நோய்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி அலர்ஜி, வயிற்று வலி போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

மேலும் குழந்தைகளுக்கு அன்றாடம் நாம் கொடுக்கும் உணவுப் பொருளின் மூலமும் ஊட்டச்சத்தை அதிகரிக்கலாம். அதை தவிர இந்த ஆயுர்வேத மூலிகைகளை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி குழந்தைகளை அடிக்கடி நோய் தாக்காமல் பாதுகாக்கலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

Baskar

Next Post

ரூ.80 வரை உயரும் மதுபானங்களின் விலை..!! இனி ஒரு குவாட்டர் எவ்வளவு தெரியுமா..? டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி..!!

Mon Jan 29 , 2024
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ.10 முதல் 80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. […]

You May Like