பிரேசிலை சேர்ந்த டிக்டாக் Influencer லுவானா ஆன்ட்ரே தனது 29 வயதில் மாரடைப்பால் காலமானார்.
உடல் அழகிற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டபோது லுவானா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. Fitness Freak-ஆன லுவானாவுக்கு கால் மூட்டில் அதிகப்படியான கொழுப்பு இருந்துள்ளது.
அதனை அகற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோதே 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். சிகிச்சையை பாதியிலேயே நிறுத்தியும் லுவானாவை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.