ஹார்ட் பீட் வெப் தொடரின் 2 ஆம் பாகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மருத்துவத் துறையைச் சார்ந்த ஒரு வெப் சீரிஸ் ஹார்ட் பீட். ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது இந்த ஹார்ட் பீட். செண்டிமெண்ட், லவ், குடும்பம், சோகம், பரிதாபம் என்று எல்லாவற்றின் கலவையாக ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தது.
இந்த சீரிஸில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மன், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஏ டெலி பேக்டரி’ நிறுவனம் இந்த சீரிஸை தயாரித்துள்ளது. இந்தத் சீரிஸை இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் உள்ளிட்டவை மையக்கருவாக கொண்டது தான் ஹார்ட் பீட் சீரிஸின் கதைக்களம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில், நான்கு எபிஸோடுகளாக ஒளிபரப்பாகி வந்தது.
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அமசங்களுடனும் சென்றுக் கொண்டிருந்த ஹார்ட் பீட் வெப் தொடர் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இத்தொடர் விரைவில் ஒளிபரப்பு செய்யப்படும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
Read more: இந்தியா மீது 26% வரி.. பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட கூட்டத்திற்கு அழைப்பு..!!