Heat wave: பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் கராச்சியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக 40 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் அனலை கக்கி வருகிறது. செய்தி நிறுவனமான PTI படி, மீட்பு அதிகாரிகள் செவ்வாயன்று 10 கூடுதல் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர், இதேபோல் திங்களன்றும் 10 உடல்கள் மீட்கப்பட்டது. அந்தவகையில் கடந்த 48 மணிநேரத்தில் சுமார் 20 பேர் கடும் வெப்பத்தால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்கள், கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது”பெரும்பாலான உடல்கள் நடைபாதைகள் அல்லது சாலையோரங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர்கள் நகரத்தில் அதிக வெப்பத்தின் வெளிப்பாட்டின் காரணமாக இறந்ததாகத் தெரிகிறது,” 20 உடல்களில் எதிலும் காயங்கள் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார், வெப்ப வெளிப்பாடுதான் மரணத்திற்கு முதன்மைக் காரணம் என்று போலீஸ் அதிகாரி சர்ஜன் சும்மையா சையத் தெரிவித்துள்ளார்.
திங்களன்று கராச்சியில் அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பமான காலநிலை தொடரும் என்றும், வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Readmore: பெரு வெள்ளம்!. கொத்துக் கொத்தாக பலியான உயிர்கள்!. உலகத்தின் பேரழிவுக்கான எச்சரிக்கை!. ஐ.நா!