fbpx

வெப்ப அலை தாக்கம்..? தார் சாலைகள் உருகியதால் வாகன ஓட்டிகள் அவதி..

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது..

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.. திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் அகமதாபாத்தில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தொட்டது.. இந்த வாரம் முழுவதும் வெப்பநிலை இதே நிலையில் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

இந்நிலையில் கடும் வெப்பம் காரணமாக சூரத்தில் உள்ள சந்திர சேகர் ஆசாத் பாலத்தை அடாஜன் பாட்டியாவுடன் இணைக்கும் 200 மீட்டர் சாலையில் தார் உருகியது. இதற்கிடையில், வாகன ஓட்டிகள் சாலைகளில் வழுக்காமல் இருக்க எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுவதைக் காண முடிந்தது.. சாலை நடந்து செல்வோரும், தங்கள் காலணிகள் சாலையில் ஒட்டிக்கொண்டிருப்பதாக புகார் கூறுகின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. மேலும் நகராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்..

Maha

Next Post

கடைசி நேரத்தில் செக் வைத்த ஐகோர்ட்..!! ராகவா லாரன்சின் ’ருத்ரன்’ படத்தை வெளியிட தடை..!!

Wed Apr 12 , 2023
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ’ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் – ப்ரியா பவானி ஷங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் […]

You May Like