fbpx

தமிழக மாணவர்கள் – வடமாநில தொழிலாளர்கள் இடையே கடும் மோதல்..!! உருட்டு கட்டையுடன் வலம் வந்ததால் பரபரப்பு..!!

கோவை மாவட்டம் சூலூர் தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கேண்டீனில் தினந்தோறும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உணவு சாப்பிடுகிறார்கள். இங்கு 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கேண்டினில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு கேண்டினில் இருந்து வெளியே ஓடினர். மேலும், வடமாநில தொழிலாளர்கள் கையில் உருட்டு கட்டை மற்றும் கம்பி போன்றவைகளுடன் கல்லூரியில் வலம் வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அண்மையில் வட மாநில தொழிலாளர்கள் திருப்பூரில் தமிழ் இளைஞர்களை விரட்டி அடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வட மாநில தொழிலாளர்கள் கல்லூரி மாணவர்களை தாக்கியது மேலும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

BBC ஊடக அலுவலகத்தில் அதிரடி ரெய்டு..!! ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பு..!! செல்போன்கள் பறிமுதல்..!!

Tue Feb 14 , 2023
டெல்லியில் செயல்பட்டு வரும் பிபிசி (BBC) ஊடக அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது பணியிலிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற ஊழியர்கள் யாரும் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்றும், அங்கிருந்த ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டும் உள்ளதாக கூறப்படுகிறது. பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது சோதனைகள் நடைபெற்று வருவதால் மேற்கொண்டு செய்திகள் எதுவும் வழங்காத வண்ணம் […]

You May Like