ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான செயல்வீரர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அந்தியூர் நிர்வாகிகளை தொடர்ச்சியாக அதிமுக கூட்டத்துக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்து வருவதாக ஒருவர் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தவரை அடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. கூட்ட அரங்கில் இருந்த நாற்காலிகள் தூக்கி வீசி மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய செங்கோட்டையன், புகார் தெரிவித்தவர் அதிமுக உறுப்பினரே இல்லை, வேண்டுமென்றே பிரச்னை செய்யும் நோக்கில் கூட்டத்துக்கு வந்துள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்த மோதலில் நாற்காலிகளும் பறந்தன. செங்கோட்டையன் தரப்புடன் மோதலில் ஈடுபட்டவர்கள், எடப்பாடி பழனிசாமியால் அண்மையில் நியமிக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தகராறு செய்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை செங்கோட்டையன் ஆதரவாளர்கள் விரட்டியும் அடித்தனர். இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அத்திக்கடவு-அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வைக்கப்படவில்லை என்பதால்தான் பங்கேற்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more:ஜாக்கிரதை..! இந்த பிரபலமான உணவுகள் உங்கள் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும்…