fbpx

சென்னையில் பெருவெள்ளம்..!! அபாய கட்டத்தில் ஏரிகள்..!! தொடரும் கனமழை..!! அதிர்ச்சியூட்டும் வானிலை அறிக்கை..!!

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் என்ன? வானிலை முன் அறிவிப்பின்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயலின் நேரடி தாக்கம் இருக்குமா? என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 4 நாட்களாகவே எப்போது மழை வரும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் தொடரும் என்பதே சென்னை வாசிகளின் எண்ண ஓட்டமாக இருந்து வருகிறது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்போது உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுப்பெற்று, புயல் சின்னமாகவும் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்பாகவே, கிழக்கு திசையில் இருந்து வீசி வரும் காற்றின் சாதகப் போக்கின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், நாகை, கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் தினசரி கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், கிழக்கு திசையில் இருந்து வீசும் ஈரப்பதம் நிறைந்த காற்றின் சாதக போக்காலும், கடலோர மாவட்டங்களில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய வானிலை முன் கணிப்புகளின்படி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, புயல் சின்னமாக மாறும்போது சென்னைக்கு வட திசையில் உள்ள ஆந்திர கடலோரத்தை நோக்கி நகர்வதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் சுழற்சி மற்றும் நகர்வின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தரவுகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில், அடுத்த இரு தினங்கள் டெல்டா பகுதிகளிலும், டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரித்தாலும், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே, வட தமிழக மாவட்டங்களில் உள்ள ஏரிகள் நடப்பாண்டுக்கான போதிய நீர் இருப்பை கொண்டுள்ளது.

ஆகையால் சுழற்சி முறையில் ஏரிகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்திருக்கிறது. அதேபோல வானிலை முன் கணிப்புகளின் அடிப்படையில், சென்னையில் பெருவெள்ளம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Chella

Next Post

மாணவர்களே...! கனமழை காரணமாக இன்று அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு...!

Thu Nov 30 , 2023
கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழை காரணமாக […]

You May Like