சத்தீஸ்கரில் 3 நக்சல் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, நக்சல் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த மூன்று நாட்களில் இந்தப் பகுதியில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய ஒருங்கிணைந்த நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்த சம்பவம் ஒன்றாகும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ள நிலையில், இந்திய ராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.