Landslide: அருணாச்சலப் பிரதேசம் சிம்லாவின் ரோஹ்ரு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கிய காரில் பயணம் செய்த 2 பேர் பலியாகினர்.
அருணாச்சலப் பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில், பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து தவறி விழுந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இந்தநிலையில், ஹட்கோட்டி-தியுனி சாலையில் ரோஹ்ரு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று இடிபாடுகளில் சிக்கியது. இதில் காரில் பயணம் செய்த 2 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது..
சிம்லா காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சஞ்சீவ் குமார் காந்தி கூறுகையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், பிலாஸ்பூரில் உள்ள கியால் கிராமத்திற்கு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் சுமார் 25 பயணிகள் பயணித்ததாக போலீஸார் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த பயணிகளை மீட்டனர். காயமடைந்த ஏழு பேர் பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், மேலும் மூன்று பேர் மார்கண்டில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Readmore: EPS: அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்…!