fbpx

கனமழை அலெர்ட்..!! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.22) மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

Chella

Next Post

கமலை கழுவி ஊற்றிய பூர்ணிமா..!! குடிகார அங்கிள்..!! வார இறுதியில் சம்பவம் இருக்கு..!!

Wed Nov 22 , 2023
பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன தான் நடக்கிறது என ரசிகர்கள் குழம்பி போய் இருக்கின்றனர். காரணம், ஒரு சில வாரங்களாக நடந்து வரும் சம்பவங்கள் தான். அதிலும் விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. இதற்கு முன் நடந்த எந்த சீசனிலும் இத்தனை முறை யாரும் விதிமுறைகளை மீறியதே இல்லை. ஒரு பக்கம் மாயா – பூர்ணிமா விதிமீறல்கள் செய்தால் மறுபக்கம் விசித்ரா – அர்ச்சனா செய்கிறார்கள். இதை வார இறுதியில் […]

You May Like