fbpx

கொட்டித் தீர்த்த கனமழை..!! வெள்ளம், நிலச்சரிவு..!! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!!

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கும் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிலபகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம் அதிக அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து மிதவை படகு மூலம் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அமைச்சர்கள் நிலையிலான அவசர கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘திருவனந்தபுரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர்சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ என்றார்.

இதற்கிடையே, திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு (மிக கனமழை) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கேரளாவின் இதர 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் (கனமழை) எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chella

Next Post

இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு இஸ்ரேலிய பெண் பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழப்பு..!

Mon Oct 16 , 2023
ஜெர்மன் தாக்குதலிலிருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர். பாதிப்படைந்த […]

You May Like