fbpx

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..! தயார் நிலையில் மீட்புப் படை..!

கேரளாவில் இன்று 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை தீவிரமடைந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு வருட கேரளாவில் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளா மாநிலத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..! தயார் நிலையில் மீட்புப் படை..!
கோப்புப் படம்

இந்நிலையில், கேரளாவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொடர் மழையால் மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழையின் தாக்கம் அதிக அளவில் காணப்படும். அதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..! தயார் நிலையில் மீட்புப் படை..!

5 நாட்கள் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மழையினால் ஏற்படும் இழப்பை சரி செய்ய கேரள அரசு, தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Chella

Next Post

இந்த உத்தரவை 10 நாளில் அமல்படுத்தாவிட்டால்.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை...

Mon Aug 1 , 2022
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறிய உத்தரவை 10 நாட்களில் அமல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர்நிலை மற்றும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்ற செய்தியின் அடிப்படையில் இதுகுறித்து தாமாக வழக்குப்பதிவு செய்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.. தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, மழைநீர் […]
இனியும் சும்மா இருக்க மாட்டோம்..! கொந்தளித்த தமிழக அரசு..! கடைகள் மீது பாயும் அதிரடி நடவடிக்கை..!

You May Like