fbpx

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் விடுத்த அலெர்ட்..!!

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 9ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் விடுத்த அலெர்ட்..!!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் சிலிண்டர்கள் விற்பனை..!! விலை எவ்வளவு தெரியுமா?

Thu Oct 6 , 2022
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட இருக்கிறது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் ரேஷன் […]

You May Like