fbpx

இடி, மின்னலுடன் 15 மாவட்டங்களில் கனமழை..! அடடே இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டமும் இருக்குபோல’..!

சேலம், ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடி, மின்னலுடன் 15 மாவட்டங்களில் கனமழை..! அடடே இந்த லிஸ்ட்ல உங்க மாவட்டமும் இருக்குபோல’..!

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

பகுதிநேர பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்..!! இனி அவர்களுக்கு இங்கு வேலை இல்லையாம்..!!

Sat Oct 8 , 2022
பிரபல ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. ஐடி நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பகுதிநேர ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொருளாதார மந்தம் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவை குறைவு போன்ற காரணங்களுக்காக தான் பகுதி நேர பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பல ஐடி நிறுவனங்களில் ஒப்பந்த பணியாளர்கள் 8 […]
ஷாக் நியூஸ்..!! 50 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கிய முன்னணி ஐடி நிறுவனங்கள்..!!

You May Like