fbpx

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட லிஸ்ட் இதோ..!!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழையும் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

கேஸ் சிலிண்டரில் இருக்கும் இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா..? வெடிக்கும் அபாயம்..!!

Mon Nov 13 , 2023
வீட்டில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி உள்ளதாம். இந்த காலாவதியான சிலிண்டரை பயன்படுத்தினால் வெடிக்க கூடிய ஆபத்தும் இருப்பதாக அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர். வீட்டு கிட்சன்களில் காய்கறி இல்லாமல் கூட சில நேரங்கள் இருக்கும். ஆனால் கேஸ் சிலிண்டர் இல்லாத கிட்சன்களையே பார்க்க முடியாது. கிராமப்புறங்களிலும் கூட தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியே சமையல் வேலையை செய்கின்றனர். புதிதாக சிலிண்டர் இணைப்பு வாங்கி விட்டால், […]

You May Like