fbpx

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வெதர்மேன் சொன்ன குட் நியூஸ்..!!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் காரணமாக இன்று (ஆகஸ்ட் 10) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 11, 12) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இன்று அதைவிட நல்ல மழை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பெய்யும். டெல்டாவில் இருந்து சென்னை வரை மழைக்கான ஹாட் ஸ்பாட்டாக இருக்க போகிறது. கடந்த 15 நாட்களாக சென்னையில் பெரிதாக மழை பெய்யவில்லை. ஆனால் இன்றும், நாளையும் சென்னையில் மழை பெய்வதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

RBI | ரெப்போ வட்டி விகிதம் உயர்வா..? குட் நியூஸ் சொன்ன ரிசர்வ் வங்கி..!! ஆனால், இதை நினைத்து அச்சம்..!!

Thu Aug 10 , 2023
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி தொடங்கிய நிலையில், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதாவது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 6.05 சதவீதமாகவே தொடரும் என சக்திகாந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டியில் எந்த […]

You May Like