fbpx

தமிழ்நாட்டில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையில் கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 2 நாட்களாக மழை சற்று ஓய்ந்த நிலையில், மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர், கோடம்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், புரசைவாக்கம், படாளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால், வெள்ளம் வடியத் தொடங்கிய பகுதிகளில் மீண்டும் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை , ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

நாளை பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம்...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Fri Dec 8 , 2023
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 09.12.2023 அன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன்பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 09.12.2023 அன்று ஒவ்வொரு […]

You May Like